கொழும்பில் அநுர ஆட்சியை முழுமையாக தவிர்க்கும் மொட்டுக்கட்சி
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களின் தீர்மானம்
மேலும், "தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்பட மாட்டாது.
ஏனெனில் அது மக்கள் ஆணைக்கு முரணான செயலாக அமையும். எதிரணிகள் வசமே பெரும்பான்மைப் பலம் உள்ளது. ஆகவே, அரசுக்கு எதிரான சக்திக்கு ஆதரவு வழங்குவதில் எமக்குப் பிரச்சினை இருக்காது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் கொள்கைகள் வெவ்வேறானவை. எனினும், நாட்டின் நலன் கருதி பொது விடயங்களின் போது ஒத்துழைப்புடன் செயற்படக்கூடும்" என்றும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 14 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
