விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் விளக்கம்
தமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளதை தேசிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் பேஸ்புக்கில் டேக் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
தொடர்பில்லை
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அந்த காணொளிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய காணொளிகள் டேக் செய்யப்படுவதில், தேசிய மக்கள் சக்திக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. சில இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பேஸ்புக்கில் காணொளிகளை உருவாக்கி டேக் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் News Lankasri

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
