களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது
களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் வைக்கிள் கடந்த (2026.07.22) அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.
இது தொடர்பில் குறித்த நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.
கைது
இதனையடுத்து, நேற்று(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும், மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூராயிரத்துக்கு மேல் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan