காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்
காலி- கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(18.6.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற காலி - ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த காருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதன் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது காரைச் செலுத்தி வந்த 26 வயதுடைய இளைஞர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri