அருட்தந்தை டிலான் மன்னார் அடம்பன் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
மன்னார் - அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையினைச் சேர்ந்த அருட்தந்தை டிலான் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(04.03.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் இன்று மன்னார் மடு தேவாயத்தில் நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு விட்டு திரும்புகையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் - அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை டிலான் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை எதிரேவந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிசிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - ஆஷிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |