புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!
விரைவில் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான PSTA சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை இன்று(24.02.2026)திருகோணமலை -வெருகல் பிரதேச சபையில் தவிசாளர் எஸ்.கருணாநிதி தலைமையில் சபை அமர்வின் போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PSTA ரத்து பிரேரணை
இதன்போது, சபை உறுப்பினர் குணநாயகம் சுசிலா இது தொடர்பான PSTA ரத்து செய்வது தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதற்காக சபை தவிசாளரால் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சபையின் மொத்த 13 உறுப்பினர்களில் அனைவரும் சபை அமர்வில் கலந்து கொண்டதுடன் அதில் 12 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் மாத்திரம் ஆதரவும், எதிர்ப்பும் இல்லாமல் நடு நிலமை வகித்தார்.
அதன்பின்னர், பின்னர் வெருகல் வப்பியா சந்தியில் PSTA சட்ட மூலத்தை ரத்து செய்வதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்தும் பெறப்பட்டது. அதில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கையெழுத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, PSTA வாக்களிப்பில் ஆதரவாக வாக்களித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கையெழுத்து துண்டில் குறிப்பிடப்பட்ட விடயத்தில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்தும் கையெழுத்து இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




