அதிவேக நெடுஞ்சாலை கடனை மீள செலுத்த 171 ஆண்டுகள்!
அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக பெற்ற கடனை செலுத்துவதற்காக 150 வருடங்கள் மேல் செல்லும் என கணக்காய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து அறுபத்தொரு இலட்சத்து முந்நூற்றி எழுபத்தி நான்கு மில்லியன் ரூபாய் (611,374) கடன் பெறப்பட்டுள்ளது.
கடனை செலுத்த போதுமான வருமானம் இல்லை
மேலும் இந்தக் கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த 171 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பின் சராசரி ஆண்டு நிகர இலாபம் ரூ. 3560.62 மில்லியன் ஆகும்.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து கிடைக்கும் வருமானத்தால் கடன் மற்றும் வட்டி செலுத்துதல்களை ஈடுகட்ட முடியாது என்று கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாராமரிப்பு செலவுகளைக் குறைத்து வருமானத்தை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குறித்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.