ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை தொடர்பான பிரேரணை அதிகாரபூர்வமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 46வது ஜெனீவாவில் ஆரம்பமானது.
இந்நிலையில், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பிரேரனை அதிகாரபூர்வமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam