சவுதியில் துன்புறுத்தல்களுக்குள்ளான தாய்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றிருந்த நிலையில், அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை (01.09.2023) அதிகாலை 4.20 மணிக்கு அவர் இலங்கை வருவார் எனவும், அவரை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் சரஸ்வதியை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமை காரணமாக கடந்த ஜுலை 15 ஆம் திகதி சவுதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
கண்ணீர்மல்க கோரிக்கை
அவர் வேலைசெய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார் எனவும், உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை எனவும் தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கண்ணீர்மல்க சரஸ்வதி இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பான காணொளி வெளியான பின்னர், அவரை வேலைக்கு அனுப்பிய முகவர்கள், சவுதியில் உள்ள தமது நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பிறிதொரு வீட்டில் வேலை பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும், தான் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சரஸ்வதி கூறியுள்ளார்.
இதன்படி அவருக்கான விமான டிக்கெட்டும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை காலை இலங்கையில் அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




