சவூதிக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற மலையகத் தாய் கதறல் : காப்பாற்றுமாறு கோரிக்கை
சவூதிக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற மலையகத்தை சேர்ந்த பெண்னொருவர் இங்கு இருக்க முடியாது என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பெண் இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி புஷ்பராஜ் என்ற பெண்னே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் வறுமை காரணமாக இவ்வருடம் ஜுலை 15ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளது
அவர் வேலை செய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார். உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை என்று தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
தற்போது அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளது. அவரைச் சவூதிக்கு அனுப்பிய இலங்கையில் உள்ள முகவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகச் சரஸ்வதியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
