மட்டக்களப்பில் சிறுவனுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!
மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தில் சிறுவனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(5.5.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செங்கலடி கணேசபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று இரவு பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு 11 வயது சிறுவன் மீது தாயார் இரும்பு கரண்டியை நெருப்பில் சூடாக்கி அதனை குழந்தையின் கையில் வைத்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுவனின் தாயாரை கைது செய்துள்ளதுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட தாயாரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam