கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் மகளும் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி 17 லட்சத்து 30ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகரான பெண் ஒருவரும் மகளுமே இவ்வாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகளும் கைது
கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் இருவரும் 61 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாயும் மகளும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு Fly Dubai Airlines இன் F.Z-549 விமானம் மூலம் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரின் பயணப் பைகளில் இருந்து 78,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிகரட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri