5000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
கம்பஹா - மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் 90 வடகொரியா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் மேலும் இருவருடன் முச்சக்கரவண்டியில் ஹிக்கடுவை நோக்கி பயணித்த நிலையில், மினுவாங்கொடையில் பொருட்களை கொள்வனவு செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவருடன் முச்சக்கரவண்டியில் வந்த இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5000 போலி நாணயத்தாள்கள் புழக்கம்
இதனையடுத்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, தலதாகம தொடக்கம் கம்பஹா வரையான மதுபான கடைகள், பல்பொருள் அங்காடிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது இந்த போலி நாணயங்கள் அப்பகுதிகளில் புழங்குவதால் 5000 நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri