சிறையில் பொடி லெசியின் அறையிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறைக் கூண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் நேற்று (08.11.2024) வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொலைபேசி உதிரிப்பாகங்கள்
இதன்போது, 'பொடி லெசி'யின் சிறைக் கூண்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டை, டேட்டா கேபிள், ஹெட்செட் மற்றும் பல்வேறு தொலைபேசி உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam