கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள சராசரி வீட்டு வாடகைத் தொகை
கனடாவில் சராசரி வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக வீட்டுமனை தொடர்பான நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சராசரி வாடகைத் தொகை 2200 டொலர்கள் என பதிவாகியுள்ளது.
குறித்த தொகையானது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் 5.9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தொற்று காலப் பகுதி
இந்நிலையில் பிரிட்டிஸ் கொலம்பியா (British Colombia) மற்றும் ஒன்றாரியோ (Ontario) தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.
சஸ்கற்றுவானில் (Saskatchewan) கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகைத் தொகை 22.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் வாடகைத் தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
