ChatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்பில் Open AI வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தவறான முடிவெடிக்கும் எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகியுள்ள நிலையில் நவீன யுக மனிதர்கள் தனிமைப்பட்டு உள்ளனர்.
அதிர்ச்சியூட்டும் தரவு
மேலும் இளைய தலைமுறையினரிடையே மனத்திடம் குறைந்து சிறிய விஷயங்களுக்கே தவறானமுடிவெடுக்கும் வரை செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது.

இதை மெய்ப்பிக்கும் விதமான முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான OpenAI ஒரு அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த தரவு, மக்கள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் AI-ஐ சார்ந்து இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
OpenAI மதிப்பீடுகளின்படி, ChatGPT-ஐ தற்போது வாரத்திற்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அந்த பயனர்களில் 0.15 சதவீதம் பேர் ஒவ்வொரு வாரமும் தவறான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அதிகப்படியான பயனர்கள் ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
மனநலக் கோளாறு
மில்லியன் கணக்கான பயனர்களிடம் மனநலக் கோளாறுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தவறான முடிவெடுக்கும் எண்ணங்கள் மற்றும் மன நல பிரச்சனைகள் குறித்து ChatGPT பதிலளிக்கும் விதத்தை மேம்படுத்த 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
ChatGPT இன் புதுப்பிக்கப்பட்ட GPT-5 மொடல் இதுபோன்ற உணர்திறன் வாய்ந்த தலைப்புகளில் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.
தவறான முடிவெடுக்கும் தொடர்பான உரையாடல்களில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்றிருந்தாலும், புதிய மொடல் 91 சதவீத துல்லியத்துடன் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.