போர் பதற்றத்திற்கு மத்தியில் மார்ச் மாதத்தில் சடுதியாக உயர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை!
மார்ச் மாதத்தின் கடந்த 29 நாட்களில் 175,661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 45,650 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த எண்ணிக்கையில் 26% ஆகும்.
சுற்றுலா பயணிகள் வருகை
இதன்படி, ரஷ்யாவிலிருந்து 15,579 பேரும், ஜெர்மனியிலிருந்து 12,603 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பேரும், சீனாவிலிருந்து 13,449 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 732,316 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 145,390 பேரும், ரஷ்யாவிலிருந்து 65,812 பேரும் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 77,358 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam