மட்டக்களப்பை உலுக்கிய சம்பவம் - மூடிய அறைகளுக்குள் அடையாள அணிவகுப்பு
மட்டக்களப்பில் மயக்கமடையச் செய்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (31.03.2026) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மூடிய நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மூடிய அறைகளுக்குள் சாட்சியான பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது முதலாவது அடையாள அணிவகுப்பில் முதலாம், இரண்டாம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இரண்டாவது அடையாள அணிவகுப்பில் மூன்றாவது நபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளையின் பின் கிணற்றில் வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேகநபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வத்தளை பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மயக்கமருந்துகளை விநியோகம்செய்த நபரை கைதுசெய்திருந்தனர்.
நீதிபதி முன் முன்னிலை
விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஏழாவது சந்தேகநபருடன் முதலாவது சந்தேகநபரும் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாகவும், இளம்தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது
இச்சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர், மயக்கமருந்துகளைப்பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டிசாரதி உட்பட உட்பட ஆறு பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri