வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள வேலைவாய்ப்புகள்
இலங்கையர்களுக்கு புதிய துறைகளில் வேலை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, கட்டுமானம், தாதியர் சேவைகள், உற்பத்தி, ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேக்கேஜிங் சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க ஜப்பான் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
கலந்துரையாடல்
ஜப்பான் ஜனாதிபதி ஹிசாயோஷி கிமுரா மற்றும் பணிப்பாளர் மசனோபி கோமியா ஆகியோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் பணிப்பாளர் ஜெஃப் குணவர்தன மற்றும் பொது முகாமையாளர் டி.டி.பி சேனாநாயக்க ஆகியோரை அண்மையில் பணியகத்தில் சந்தித்துள்ளனர்.
இதன்போது ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாயம், தங்குமிட சேவைகள் மற்றும் கட்டடங்களை சுத்தம் செய்தல் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயிற்சி
இந்த துறைகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களை கொண்ட பயிற்சிக் குழுவை இலங்கையில் நிறுவுவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
IM ஜப்பான் திட்டத்தின் கீழ் சுமார் 500 இலங்கையர்கள் தற்போது ஜப்பானில் தொழில்நுட்ப சேவையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
எதிர்காலத்தில், சுமார் 100 பயிற்சியாளர்கள் ஜப்பான் செல்ல தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
