எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 495 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று(31.07.2026) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
இதற்கமைய, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்பிர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரம்
இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 89.69 டொலராகவும், ஒரு பரல் WTI கச்சா எண்ணெய்யின் விலை 84.5 டெலராகவும் பதிவாகியுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this video
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri