இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மாதச் செலவு : வெளியான புள்ளிவிபரம்
இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இந்த மாதாந்த வறுமைக் கோட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை
குறைந்தபட்ச மாதச் செலவு
இதன்படி, இந்த நாட்டில், ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்ய 15,978 ரூபா தேவைப்படுகின்றது. தேசிய ரீதியில் இந்தத்தொகை ரூ. 16,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதச் செலவு 63,912 ரூபாவாகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இந்த அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும், இதன்படி 17,352 ரூபாவாக அந்த தொகை பதிவாகியுள்ளது.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு பதிவாகியுள்ளதுடன் அது 15,278 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |