பொலநறுவையிலிருந்து வந்த பிக்குமார் மட்டக்களப்பில் அமைக்கும் விகாரை: ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு எல்லைப்புறத்திலுள்ள நெடியகல்மலை பகுதியில் பொலநறுவையிலிருந்து வந்த பிக்குமார் விகாரை அமைத்து வருவதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று (02.11.2025) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்கள் நேரடியாக எம்மிடம் விடயங்ளைத் தெரிவித்து வருகின்றார்கள்.
பௌத்த மத வழிபாட்டுத் தலம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் நெடியகல் மலை எனும் பிரதேசம் அமைந்துள்ளது.
அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால், அந்த 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருப்பது பொலநறுவை மாவட்டமாகும்.

அப்பகுதியிலிருந்து எமது தமிழ் மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு எல்லைப்புறத்திற்கு பிக்குமார் வந்து அங்குள்ள நெடியகல்மலை எனும் பகுதியில் பௌத்த மத வழிபாட்டுத் தலம் ஒன்றை அமைப்பதற்குரிய செயற்பாட்டில் பிக்குமார் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
பௌத்தமத மக்கள் வாழும் இடங்களில் பௌத்த வழிபாடு தலங்கள் அமைவது சாதாரண விடயம்.
பௌத்த துறவிகள்
இந்து மக்கள் வாழ்கின்ற பகுதியில் அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களும், கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற வகையில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், அமைவது இயற்கையானது.
அது ஏற்றுக் கொள்ளக் கூடியது, நியாயமானது. ஆனால், எந்த ஒரு பௌத்த சிங்கள குடிமகனும் வாழ்ந்திராத இடத்தில் அந்த நெடியகல்மலை எனும் இடத்தில் 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து வந்து பௌத்த துறவிகள் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருந்த போது, அவர்களுடைய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த காரணத்தினாலும் அரசாங்கத்தின் சலுகைகளை பெறுகின்றார்கள் என்ற காரணத்தினாலும், இந்த விடயங்களை அவர்கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam