மனிதர்களிடம் இருந்து நாய்க்கு தொற்றிய குரங்கம்மை
பிரான்ஸில் இரண்டு நபர்கள் மற்றும் அவர்களின் செல்லப்பிராணியான நாய் ஒன்றுக்கும் குரங்கம்மை நோய் தொற்றியுள்ளதாக தெரியவருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
செல்லப்பிராணியான நாய் குரங்கம்மை தொற்றுக்கு உள்ளானது இதுவே முதல் முறை
காட்டு விலங்குகளுக்கு இந்த நோய் தொற்றுவதற்காக சாட்சியங்கள் இருந்த போதிலும் செல்லப்பிராணியான நாய் போன்ற விலங்கு ஒன்றுக்கு குரங்கம்மை வைரஸ் தொற்றியுள்ளமை இதுவே முதல் முறை.
இதன் மூலம் விலங்குகளுக்கும் இந்த நோய் தொற்றும் என்பது உறுதியாகி இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்
எவ்வாறாயினும் குரங்கம்மை நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் தமது செல்லப்பிராணிகளிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு குரங்கு அம்மை நோய் தொற்றலாம் என்பதை தான் எதிர்பார்த்து இருந்ததாக பிரான்ஸ் நாட்டின் தொற்று நோய்கள் தொடர்பான தேசிய நிதியத்தின் பணிப்பாளர் மருத்துவர் வில்லியம் ஷாஃப்னர் தெரிவித்துள்ளார்.