அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு 300 ரூபாய் பணம் அனுப்பிய இளைஞர்கள் குழு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு 300 ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை அமைச்சர் பிரசன்ன ரணவீர பெற்றுக்கொள்ளும் வகையில், பண அஞ்சல் முறையின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு இன்று (18) பணம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்ம அறக்கட்டளையின் ஸ்தாபகரும், தலைவருமான சமன் பிரியந்த விஜேவிகம உள்ளிட்ட இளைஞர்கள் குழுவினரால் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 14 ஆம் திகதி காலை தனது மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போது சேவை வழங்கும் போர்ட்டருக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என விமான நிலையத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்த பின்னணியில், போர்ட்டருக்கு 700 ரூபாயை இராஜாங்க அமைச்சர் வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது, போர்ட்டரை இராஜாங்க அமைச்சர் தாக்கிய காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
