முள்ளிவாய்க்கால் நினைவேந்திய மாணவர்களைத் தாக்கும்படி தமிழ் இராஜாங்க அமைச்சர் உத்தரவு...!
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்துகொண்டிருந்தபோது, பொலிஸார் அங்குவந்து அடாவடிசெய்திருந்த விடயம் யாவரும் அறிந்ததே.
ஏற்றப்பட்ட தீபங்களை காலால் மிதித்து, துண்டுபிரசுரங்களைக் கிழித்தெறிந்து, மாணவர்களை மிரட்டி பல காரியங்களை பொலிஸார் அங்கு அரங்கேற்றியிருந்தார்கள்.
இலங்கையின் பல பாகங்களில் நடைபெறுகின்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் பொலிஸாரால் குழப்பப்படாத நிலையில், மட்டக்களப்பில் மாத்திரம் எதற்காகக் குழப்புகின்றீர்கள் என்று மாணவர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
பல்கலைக்கழக நிகழ்வுகளைக் குழப்பும்படி உங்கள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் எங்களுக்கு கடுமையான அழுத்தம் வழங்குகின்றார் என்று இரகசியமாகக் கூறினாராம் ஒரு தமிழ் பொலிஸார்.
மட்டக்களப்பு மக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள், பிரதேசவாதச் சிந்தனையுடன் தான் இருக்கின்றார்கள் என்பதை எஜமானர்களுக்கு நிரூபிப்பதற்குத்தானாம் இந்த நடவடிக்கை என்று தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam
கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam