முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த இன்றைய நிகழ்வு
தனி நாடு கோரிய 3 தசாப்த உரிமைப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மிகக் கொடூரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது.
உயிரைக் காத்துக் கொள்ள, உணவைப் பெற்றுக்கொள்ள, உறவுகளை காப்பாற்றவென்று அப்போது முள்ளிவாய்க்கால் மண்ணெங்கும் ஓடித்திரிந்தது தமிழினம்.
கண் முன்னே, தாயின் உயிர் பிரிந்ததையும், தான் பெற்ற பிள்ளையின் கை கால்கள் சிதறுண்டதையும், பாலுக்காய் தாயின் மார் தேடிய பச்சிளம் ஒன்று தாயின் உயிர் பிரிந்தது தெரியாமல் துடித்ததையும் எங்கணம் மறப்பது.
நாளை, எம் தாய்நாடு என்ற வேட்கையுடன் தன்னை அர்ப்பணித்து களமாடிய வீரர்களின் கண் முன்னே அந்த தாயகக் கனவு சிதைந்த கொடூரத்தின் வேதனையையும் எப்படி மறப்பது.
இப்படி துயரங்களை மட்டுமே கொடுத்த அந்த கொடூர நினைவுகளை சுமந்து இன்றும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் சிந்தி கதறுகின்றது தமிழினம்.
அன்று கண்ட வேதனைகளை இன்றும் மீண்டும் மீட்டிப் பார்க்கும் வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் போது இளையவர்கள் ஒன்றிணைந்து கண்முன்னே கொண்டு வந்திருந்தனர்.
வரலாறு எமக்கு கொடுத்த துயரங்களை மீண்டுமொரு முறை மீட்டிப் பார்க்கும் தருணம் இது,