போலி நிதி நிறுவனம் மூலம் பண மோசடி: காதலியுடன் சிக்கிய வர்த்தகர்
அனுராதபுர - கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபாவை மோசடி செய்த வர்த்தகர் ஒருவரும் அவரது காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், 2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தனியார் பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர் மக்களை ஏமாற்றி பெற்றுக்கொண்ட பணத்தில் கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதலீடு செய்த குற்றச்சாட்டு
மேலும், காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது காதலியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அவரது காதலியும் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரிடம் ஒப்பமைக்கப்படுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri