அமெரிக்க - ஈரான் மோதலுக்கு மத்தியில் மோடிக்கு சென்ற அவசர அழைப்பு!
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனிடம் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அழைப்பின் போது, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்பில் மசூத் பெஷேஷ்கியன், பிரதமர் மோடிக்கு விளக்கமளித்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, முன்னோக்கிச் செல்வதற்கான வழி, பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றின் உடனடி அவசியத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.
அதிகரிக்கும் பதற்றம்..
மேலும், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை மோடி வலியுறுத்தினார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி தளங்களான ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகியவற்றின் மீது இன்று காலை அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டது.
இதனை தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையிலான போர்பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையிலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஈரானிய ஜனாதிபதி தொடர்பு கொண்டு சூழ்நிலை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 22 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
