உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
எரிபொருள் விலை
உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போர்
கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் - இஸ்ரேல் நாடுகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordow), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதனடிப்படையிலேயே, ஈரான், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட முடிவு செய்துள்ளது.
உலக எரிசக்தி வழங்கல்
இதேவேளை, ஹார்முஸ் வளைகுடா மூடப்படுவதாக எழுந்துள்ள அச்சுறுத்தலின் காரணமாக உலக எரிசக்தி வழங்கல் மீதான பெரும் அபாயங்களை கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி எச்சரித்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி நேற்றையதினம், வெளியிட்ட அறிக்கையில் Brent crude எண்ணெய் விலை பரலுக்கு 110 டொலர் வரை உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் Brent crude எண்ணெய் விலை பர்ரலுக்கு சுமார்95 டொலராக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஈரான், தினமும் 1.75 மில்லியன் பரல்கள் அளவுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தினால், பிரென்ட் எண்ணெய் விலை பரலுக்கு 90 டொலர் வரை உயரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் அணு உள்கட்டமைப்புகளை இலக்காக்கி மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, திங்கள் அன்று எண்ணெய் விலை ஜனவரிக்குப் பிறகு மிக உயர்ந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலைமைகள் தொடர்ந்தால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என வங்கி எச்சரிக்கிறது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 21 மணி நேரம் முன்

பாரிஜாதம் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்... திருமாங்கல்யம், முதல் புரொமோ Cineulagam

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
