பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு மோடி இரங்கல்
கருணையின் கலங்கரை விளக்கமாக பாப்பரசர் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன் என தெரிவித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்துவின் கொள்கை
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார்.
துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார். அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்.
மேலும் விரிவான வளர்ச்சிக்கான அவரது உறுதிப்பாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        