அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதி
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில், இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று(6.09.2026) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடை பெற்றபோதே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.
அவசர நிலைகளை எதிர்கொள்ள
மேலும் உரையாற்றுகையில், "கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, தற்போது நாடு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது.

சுகாதாரத் துறையின் மனித வளத்தை மேம்படுத்தும் முகமாக, வரலாற்றில் முதன்முறையாக குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உரையாற்றும்போது, நாட்டின் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன என்றும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்ள இத்தகைய நவீன சிகிச்சைத் தொகுதிகள் மிக அவசியமானவை என்றும் தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றும்போது, இலங்கையின் நீண்டகால மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழ்வதில் ஜப்பான் பெருமை கொள்கின்றது என்றும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானின் அனுபவத்தையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்தார்.
[DE8NZU
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும் வைத்தியசாலைப் பணிக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan