மித்ரா சக்தி XII – 2026: இந்திய இராணுவ வீரர்கள் இலங்கை வருகை
இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்திற்கு இடையேயான வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியின் 12வது கட்டமான 'மித்ரா சக்தி XII – 2026’ பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்திய இராணுவ வீரர்கள் நேற்று (13.11.2026) மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இலங்கைக்கு வந்தடைந்த இந்திய இராணுவ வீரர்களில் 19 அதிகாரிகள் மற்றும் 150 இதர வீரர்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நோக்கம்
இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சி, மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் நவம்பர் 13 முதல் 26 வரை நடைபெற உள்ளது.

இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள நட்புறவு, பரஸ்பர புரிதல் மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
2012ல் தொடங்கப்பட்ட 'மித்ரா சக்தி' கூட்டு இராணுவப் பயிற்சி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது என்று இராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri