இலங்கையில் குறிவைக்கப்பட்ட இஸ்ரேலியர்கள்: அம்பலப்படுத்தும் அமெரிக்கா!
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலினை திட்டமிட்டதாக கருதப்படும் ஈரான் நாட்டவருக்கும், அறுகம் குடா(Arugam Bay Beach) தாக்குதல் திட்டமிடல் விவகாரத்திற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதித்துறையினால்(United States Department of Justice) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாரிய துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான திட்டங்கள் சில வகுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவினால் குற்றவாளியாக கருதப்படும் ஃபர்ஹாத் ஷகேரி என்ற டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டின் சந்தேகநபர், தற்போது ஈரானில் தலைமறைவாக உள்ளதாக அமெரிக்க நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் ஐ.ஆர்.ஜி.சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிடுவதற்கு உதவுமாறு ஷகேரியிடம் கேட்டுக் கொண்டதாக அறிய முடிகிறது.

இதுவே தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து தமது நாட்டு பயணிகளை எச்சரிக்க அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளைத் தூண்டியது.
மேலும், நியூயோர்க் நகரத்தில் வாழும் இஸ்ரேலிய வணிகர்களை ஷகேரி இலக்குவைத்தமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்தது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 





 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        