சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
வெலிமட மிராஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் ஊவா பரணகம - பல்லேவெல பிரதேசத்தில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குச் சென்ற போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
நேற்றிரவு வீட்டின் அறையொன்றில் உறங்கச் சென்றிருந்த நிலையில் இன்று காலை அப்பகுதியினர் நடத்திய விசாரணையில் பெண் வீட்டில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
காணாமல் போன பெண்
ஊவா பரணகம பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டதாகவும் இது தொடர்பில் ஊவா பரணகம பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்களை விசாரித்ததில் அவர் பல்லேவெல பகுதியை சேர்ந்த காணாமல் போன இளம்பெண் என தெரியவந்துள்ளது.
இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரது கீழ் உடல் நிர்வாணமாக இருந்தது மற்றும் அவர் அரை மயக்கத்தில் இருந்தார், பின்னர் அவர் தனக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்று கூறினார்.
மேலதிக சிகிச்சை
சம்பவத்தை எதிர்கொண்ட இளம்பெண் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும், அவர் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஊசி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri