இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உக்கிர மோதலில் உயிரிழந்த பெண்ணிற்கான அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலின் போது காணாமல் போனதாக கூறப்படும் பெண் சமூக ஊடகங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாதியாக சென்ற பெண்
இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் 2022ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவின் கீழ் வெளிநாடு சென்றுள்ளார்.
கம்பஹாவைச் சேர்ந்த 49 வயதான இவர் இஸ்ரேலுக்கு தாதியாக சென்றுள்ளார்.
இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையும் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
