தொடரும் இஸ்ரேல் - காஸா மோதல்கள் : இலங்கைக்கு பாதகமான நிலை
இஸ்ரேலுக்கும் - பலஸ்தீனத்திற்கும் இடையில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருளின் விலையில் நீண்டகால அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் - காஸா மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலையில் கடுமையான தாக்கம் ஏற்படும். எனவே ஆபிரிக்க ஒன்றியத்தின் பரிந்துரையின் படி, இந்த மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இந்த மோதல்கள் காரணமாக எரிபொருளின் விலையில் நீண்டகால அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இது இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |