காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்

United Nations Benjamin Netanyahu Israel Israel-Hamas War
By Benat Oct 10, 2023 11:29 AM GMT
Report

புதிய இணைப்பு

இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள பீர்ஷெபா நகரின் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக ஹமாஸ் அமைப்பு தகவல்  வெளியிட்டுள்ளது.

மேலும், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்து  நேரலையில் ஒளிபரப்புவோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தநிலையில், தங்களது  மண்ணில் 1500 ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என இஸ்ரேல் இராணுவத்தினர்  தெரிவித்துள்ளதுள்ளதாகவும், எல்லை பாதுகாப்பாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

மூன்றாம் இணைப்பு

இஸ்ரேல் கடற்படை காஸா கடற்பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நீண்ட நாள் போருக்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ் | Israel Palestine War Update

இரண்டாம் இணைப்பு

ஹமாஸ் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

முதலாம் இணைப்பு

இஸ்ரேல்  போரை தொடங்கவில்லை,  ஆனால் இஸ்ரேல் தான் போரை முடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்க படையினரின் உள்நுழைவு: இஸ்ரேல் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்க படையினரின் உள்நுழைவு: இஸ்ரேல் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம்

போர் உக்கிரம்

இந்த நிலையில், போர் உக்கிரம் அடைந்து வருவதுடன்  காசா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் இராணுவம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ் | Israel Palestine War Update

மேலும், ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. காசா எல்லையை முற்றிலுமாக இஸ்ரேல் முடக்கியதுடன், உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இதுவரை, இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ அடைந்துள்ளது.

இந்தநிலையில், நாங்கள் போரில் இருக்கிறோம். அதனால், பேச்சுவார்த்தைக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ உரிய தருணம் இது இல்லை. நாங்கள் இன்னும் எங்களுடைய எல்லை பகுதியை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் போரை முடிக்கும்

அதேசமயம்,  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறுகையில்,

இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ் | Israel Palestine War Update

இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் இதற்கு முன்னர்  எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை காக்க போராடி வருகிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மேலும், அப்பாவி மக்களை கொல்வது குற்றமாகும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கு ஹமாஸ் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹமாஸ் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US