கனடாவில் மாயமான இலங்கை தமிழர்! புகைப்படத்தினை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கனடாவில் இலங்கை தமிழ் இளைஞரொருவர் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா, ஒன்ராறியோ - Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி மாலை 6 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, குறித்த நபர் 5'5' அடி உயரம் கொண்டவரும், கடைசியாக சிவப்பு மற்றும் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
மேற்படி நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-866-876-5423 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |