நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் 04 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தகவல்
இணையத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக ஆபாசமான மற்றும் பொய்யான தகவல்களைப் பிரசுரித்தமை, விளம்பரம் செய்தல் மற்றும் உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காக குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பல முகநூல் பக்கங்களைப் பயன்படுத்தி இந்த குற்றச்செயலை செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
