அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரசாங்க ஊழியர் சம்பள கொடுப்பனவை அதிகரிப்பதன் மூலம் ஊழியர்களுக்கும் மாதாந்தம் குறைந்தபட்சம் 55,000 ரூபா அல்லது அதற்கும் அதிகமான தொகை கிடைக்குமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்பில் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறான கருத்தாக இருக்குமானால் அதனைத் திருத்துவது தனது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் என்ற ரீதியில் தாம் முக்கிய அமைச்சரவை முடிவுகளை மக்களுக்கு அறிவிப்பதாகவும், ஆனால் சில அமைச்சரவை தீர்மானங்கள் மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் அமைச்சரவை கூடிய போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அதில் 02 முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு மறுசீரமைப்பின்றி ரூ.25,000 கொடுப்பனவு வழங்கப்படும். இரண்டாவதாக, அடிப்படை சம்பளம் திருத்தப்படாவிட்டால், 24% முதல் 25% வரை உயரும். அரச பணியில் உள்ள குறைந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 55,000 அல்லது அதற்கு மேல் அதிகமான தொகை கிடைக்குமென தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
