தவறான முடிவெடுத்த பெண் உயிர் மாய்ப்பு: பொன்னாலையில் சம்பவம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கணவனை விட்டுப் பிரிந்த நிலையில் சில காலமாக வாழ்க்கை நடாத்தி
வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான 26 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan