சம்பவத்தின் போது வீட்டிற்குள்ளேயே இருந்த கோட்டாபய! சரமாரி கேள்விகள் - பகிரங்கப்படுத்தும் அரசாங்க தரப்பு (Video)
தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் சரமாரி கேள்விகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்து வருகிறார்.
இதன்போது ஊடகவியலாளரொருவர், குறித்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட்ட போது ஜனாதிபதி எங்கிருந்தார் என கேள்வியெழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, போராட்டம் நடந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டிற்குள்ளேயே இருந்ததாக குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றிரவு என்ன நடந்தது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான ஊடக சந்திப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.
“உண்மை” என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்க தரப்பினர் இது குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
