டெங்கு பரம்பலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை
டெங்கு நோயின் தீவிர பரம்பல் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சினால் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்கள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஜனவரி 08 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 10 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடுகையில்,
பல பகுதிகளில் தீவிர பரிசோதனை
இக்காலப்பகுதியில் வீடுகளையும் வேலைத்தளங்களையும் பொது இடங்களையும் குழுக்களாகப் பரிசோதனையிட்டு, நுளம்பு பெருகும் இடங்களைக் கண்காணித்து அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணியில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செயற்படவுள்ளனர்.
முதல் நாள் 08 ஆம் திகதி பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மயானங்கள் பார்வையிடப்பட்டு, இரண்டாம் நாள் 09 ஆம் திகதி அரச தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டட நிர்மானத்தளங்கள் பார்வையிடப்படவுள்ளதோடு இறுதி நாள் 10 ஆம் திகதி பொது மக்களின் வீடுகள் பார்வையிடப்படவுள்ளன.
எனவே குறித்த நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களை துப்புரவாக வைத்திருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
