30 இற்கும் மேற்பட்டோருக்கு இராஜாங்க அமைச்சு பதவி: ஜனாதிபதி - பிரதமர் ஆலோசனை
30 தொடக்கம் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் ஆலோசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் நால்வருக்கும் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும், அரசில் இணைந்து இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சு பதவிகள்
அ.அரவிந்குமார், ச.வியாழேந்திரன், சுரேன் ராகவன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
21 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு இராஜாங்க அமைச்சர்களை
நியமிப்பதற்கென தற்போது தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்னதாகக்கூட
நியமனம் இடம்பெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.





துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! Manithan

திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
