எரிசக்தி அமைச்சின் அவசர அறிவிப்பு
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடியான நிதி சேகரிப்பு குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எரிசக்தி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சரின் புகைப்படத்தை வட்ஸ்அப் கணக்கில் காட்சிப்படுத்தி, அவர் பேசுவது போன்ற தோற்றத்தை மோசடி செய்பவர்கள் உருவாக்குகின்றனர்.
அவசர அறிவிப்பு
அண்மையில் வீசிய 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளுக்கு உதவுவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் பணம் வசூலிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சரின் ஊடகச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸியில் முறைபாடு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது சமூக வலைத்தளப் பதிவுகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri