டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான மேலதிக கட்டணம் நீக்குதல் தொடர்பில் வெளியான தகவல்
டிஜிட்டல் மற்றும் QR குறியீடு (QR Code) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு தற்போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுமையாக நீக்க அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசு வழங்கியுள்ளது. இது ஒரு மாதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட தற்காலிக நடவடிக்கை அல்ல என்றும், எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வர்த்தகர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தங்கள்
அதன்படி, பொருள் அல்லது சேவையை டிஜிட்டலில் மேற்கொள்ளும் போது, எந்தவித கூடுதல் செலவும் இன்றி கட்டணம் செலுத்துவதற்கான வாய்ப்பு நுகர்வோருக்கு கிடைக்கும்.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட முன்னேற்றத் திட்டங்கள் குறித்த ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரை டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு அதிகமாக ஈர்க்கும் வகையில், சிறப்பு சலுகைகள் வழங்கும் திட்டத்துடன் இந்த சேவைகளை மறுபடியும் அறிமுகப்படுத்த (Re-launch) அரசு எதிர்பார்க்கிறது.

பணம் (Cash) பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து விலகி, டிஜிட்டல் சேவைகளுக்கு மாறுவதின் முக்கியத்துவம் குறித்து மக்களை விழிப்புணர்வு செய்யும் முயற்சியே இதன் பிரதான நோக்கமாகும்.
கார்ட் அல்லது டிஜிட்டல் முறைகள் மூலம் கட்டணம் செலுத்தும் மேலதிக கட்டணம் வசூலிக்க முடியாது என்பதை பல நுகர்வோர் அறியாதுள்ளனர்.
அது குறித்து பொதுமக்களுக்கு விரிவான விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam