சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல் தொடர்பில் கல்வி அமைச்சர் விளக்கம்
2023 ஆம் ஆண்டிற்கான தரம் 6இற்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2023 ஆம் ஆண்டிற்கான தரம் 6இற்கான மதிப்பெண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று உறுதியளித்துள்ளது.
வெட்டுப்புள்ளி
இதேவேளை தரம் 6இற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் பிரபல பாடசாலைகளில் தரம் 6 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்படும்.
இந்நிலையில் தற்போது தரம் 6இற்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.