கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெளியேறிய அமைச்சர்கள் - ஊடகவியலாளர்கள் அதிருப்தி
ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து நேற்று(26) யாழ்ப்பாணம் அரியாலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததிருந்தனர்.
ஆரம்பத்தில் தனது கருத்தை இருபது நிமிடங்கள் வரை சிங்கள மொழியில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்தார்.
இடைநடுவே வெளியேறிய அமைச்சர்
அதன் பின்னர் சிங்கள உரையின் மொழிபெயர்ப்பைத் தமிழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதில் வழங்கிய நிலையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் தமக்கு வேறு ஒரு பணி இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.
ஆட்சிக்கு வர முதல் அடிக்கடி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்புக்களை நடத்திய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் எப்போதாவது இருந்து விட்டே ஊடக சந்திப்புக்கு அழைக்கிறார்கள்.
அவ்வாறான நாளிலும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்து விட்டு ஊடகவியலாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பதற்குப் போதிய சந்தர்ப்பத்தை வழங்காமல் வேறு பணிகள் இருக்கின்றன எனக் கூறிவிட்டு சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan