நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
புதிய இணைப்பு
நேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், நேற்று(26.08.2026) நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்தின் பின்னர், நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் புவியியல் இருப்பிடம் காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயம் இருப்பதாக
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநரான பசந்த ராஜ், இன்று அல்லது நாளை "இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள்" ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிக மழைப்பொழிவு இல்லை, ஆனால் மண்சரிவு ஏற்படக்கூடும். அவர்கள் இமயமலை ஆபத்துக்களைக் கண்காணித்து வருவதாகவும், இங்கு காலநிலை மாற்றம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..