பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது: த.மகேந்திரன் கோரிக்கை
பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமது தவறை உணர்ந்து கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இலட்சக்கணக்கான பணம் இலாபம்
ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான பணம் இலாபமாக கிடைத்துள்ளது. மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுகிறது.
அத்துடன் எமது வளங்களை அள்ளி செல்கின்றனர். எமது பகுதி கடற்றொழிலளர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே சொல்கிறார் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        